2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை: பிரபா கணேசன்

Super User   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

தான் அரசாங்கத்துடன்  இணைந்தமை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தான் எதிர்க்கட்சியில் அமரப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் 'டெய்லி மிரருக்கு' தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வது குறித்து தனது கட்சியின் செயலாளரிடமிருந்து தனக்கு கடிதம் கிடைத்துள்ளதாக பிரபா கணேசன் கூறினார். எனினும் இது, தன்னுடைய முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் அரசாங்கத்துடன் இணைந்தமைக்கான காரணங்களை உள்ளடக்கிய விளக்கமளிப்புக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகவில்லை எனவும் தானே தொடர்ந்து அக்கட்சியின்  தேசிய அமைப்பாளராக உள்ளதாகவும் பிரபா கணேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்  ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து இடைநிறுத்தி  வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சித் தலைவர்  தலைவர் மனோ கணேசனினால் பொதுச்செயலாளர் என்.குமரகுருபரன் தலைமையில் 10 அரசியற்குழு உறுப்பினர்கள் அடங்கிய ஒழுக்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • king Tuesday, 10 August 2010 04:37 AM

  குடும்ப அரசியலுக்கு கிடைத்த பரிசு

  Reply : 0       0

  Saleem Tuesday, 10 August 2010 06:14 AM

  அரசாங்கத்துடன் இருந்தாற்றான் மந்திரிப் பதவியும் காரும் கிடைக்கும்.

  Reply : 0       0

  Ravishankar Tuesday, 10 August 2010 06:51 AM

  குடும்ப அரசியல் என்பது இலங்கையின் எல்லா கட்சிகளிலும், எல்லா இனங்களிலும் இருக்கிறது. எல்லாருமே பரிசு வாங்கி உள்ளார்கள். பிரபா கணேசனின் பரிசு என்ன என்பது காலகதியில் தெரிய வரும்.

  Reply : 0       0

  Rajarajeswaran Tuesday, 10 August 2010 02:04 PM

  arasaangaththudan porathuthaan poreenga pirahu en katchiyil kudumba pangu ketkireenga ? paavame namma Raathakrishnanukku vaakkalikka irunthuthu.
  Katchiya vittu pottu poidunga.

  Reply : 0       0

  Rajarajeswaran Tuesday, 10 August 2010 02:08 PM

  அரசாங்கத்துடன் போறதுதான் போறீங்க, பிறகு ஏன் கட்சில குடும்ப பங்கு கேட்குறீங்க ? பாவமே நம்ம ராதாகிருஷ்ணனும் இததானே சொன்னார்.அவருக்கு வாக்களிக்க இருந்திச்சு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X