Super User / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையைச் சேர்ந்த 200 குடியேற்றவாசிகளுடன் கனடாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் கப்பல் குறித்து கனேடிய அரசாங்கம் கரிசனை கொண்டிருப்பதாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் கூறியுள்ளார்.
நேற்று டொரண்டோவில் நடைபெற்ற டொரண்டோ பொருளாதாரக் கழக வைபவமொன்றில் பேசுகையிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
59 மீற்றர் நீளமான இக்கப்பலை பல வாரங்களாக கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆட்களைக் கடத்தப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இக்கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
"இது தொடர்பான நடவடிக்கை விபரங்கள் குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் கப்பலில் யார் இருக்கிறார்கள்? ஏன் அவர்கள் கனடாவுக்கு வரக்கூடும் என்பத குறித்து நாம் கரிசனை கொண்டுள்ளோம்" என அமைச்சர் விக் டோஸ் தெரிவித்துள்ளார்.
48 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
19 Nov 2025