Super User / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகம் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படமாட்டர் என பொலிஸார் டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தானர்.
பொலிஸ் வட்டரங்களின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஸவால் மேர்வின் சில்வாவை நேற்று பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் தர்மபால மாவத்தையில் உள்ள அலுவகத்திற்குள் எந்தவொரு அதிகாரியும் அனுமதிக்கப்படமாட்டார்.
முன்னாள் பிரதியமைச்சரின் அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடியிடம் இது தொடர்பில் வினவிய போது, முன்னாள் பிரதியமைச்சரின் அலுவகத்திற்கு முன்னால் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியும். ஆனால் அந்த அலுவலகத்திற்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago