2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கிழக்கு மாவட்ட மற்றும் மாத்தறை ஊடக இல்லங்கள் மூடப்பட்டன

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

மட்டக்களப்பில் இயங்கி வந்த ஊடக இல்லம் உட்பட அம்பாறை மற்றும் கல்முனை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இயங்கிய ஊடக இல்லங்கள் அனைத்தும் கடந்த திங்கட்கிழமையுடன் மூடப்பட்டுள்ளன.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கையில் ஊடகவியாளர்களின் தகைமைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு சர்வதேச ஊடக அபிவிருத்தி நிறுவனமான இன்டர் நியுஸ் எனப்படும் நிறுவனத்தினால் 2006ஆம் ஆண்டு கல்முனை, அம்பாறை மற்றும்  மாத்தறை ஆகிய பிரதேசங்களில் ஊடக இல்லங்கள் நிறுவப்பட்டன.

மட்டக்களப்பு ஊடக இல்லம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட்டது

மட்டக்களப்பு ஊடக இல்லம் மூடப்பட்டது குறித்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் தமது கவலையை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை காரணம் காட்டியே கல்முனையில் ஊடக இல்லம் திறக்கப்பட்டது. ஆனால், மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்கள்  அதனால் எந்தப்பயனும் அடையவில்லை.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட ஊடக இல்லம் மட்டக்களப்பிலுள்ள ஊடவியலாளர்களின் வேண்டுகோளின் பேரில் கடந்த
நான்கு மாதங்களுக்கு முன்பு  திறக்கப்பட்டபோதிலும் தற்போது அது மூடப்பட்டுள்ளது.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .