2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மேர்வினின் பாதுகாப்பு குறைப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

( ஜமீலா நஜிமுதீன்)

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு  குறைக்கப்படவுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பாதுகாப்பே மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்ல டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
 

அதேவேளை, மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனங்களும் குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.
 

இதேவேளை,  களினியில் இன்று பிற்பகல் தனது ஆதரவாளர்களை சந்தித்த மேர்வின் சில்வா, தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கு சில 'நாய்கள்' அழுத்தம் கொடுப்பதாக கூறியமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தான் தனிப்பட்ட பாதுகாப்பு ஊழியர்களை பயன்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--