2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். விஜயம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் இன்று காலை கலந்துகொண்டனர்.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நல்லூர் கோயிலில் முன்வைக்கப்பட்ட வேண்டுதலை நிறைவேற்றும் முகமாகவே இந்த பூசை நிகழ்வுகளில் அவரது புதல்வர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழிபாடு நிகழ்வின் போது, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--