2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஜ.தே.மு. எம்.பிகள் நீதிமன்றில் ஆஜராக்கப்படுவர்

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர்  பிரசாந்த ஜயகொடி "டெய்லி மிரருக்குத்" தெரிவித்தார்.

பொலிஸாரை தாக்கியதாக இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர்களை விடுவிப்பதற்காக இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாகவும் பின்னர் அவர்கள் பொலிஸாரை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--