2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் இலவச பயணச்சீட்டு

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் இலவச பஸ் அனுமதி பயண அட்டைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊடக அமைப்புகளும் இது தொடர்பாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, இது நிறைவேற்றப்பட்டதாக கம்பஹா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பிரசங்க பெரேரா தெரிவித்தார்.

இந்த இலவச அனுமதி அட்டைகளை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் இதனை பயன்படுத்தி கம்பஹா மற்றும் கொழும்பில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய முடியும் எனவும் இதன் மூலம் ஊடக வியலாளர்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X