Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலாசார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தணிக்கை சபையில் முஸ்லிம் ஒருவரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னர் இருந்த இணக்க சபையில் முஸ்லிம் ஒருவர் இருந்தார். எனினும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபையில் எந்த ஒரு முஸ்லிமும் நியமிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கலாசார அமைச்சர் பவித்திர வன்னியாராச்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதம் அனுப்பியுள்ளதாக என்.எம்.அமீன் தெரிவித்தார்.
முஸ்லிம் ஒருவர் இணக்க சபையில் நியமிக்கப்படுவதன் மூலம், இலங்கையில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும் வெளியீடுகளில் இஸ்லாமிய கலாசாரத்திற்கு பொருந்தாத விடயங்கள் இருப்பின் அவற்றை தடுக்க முடியும் என அமீன் தெரிவித்தார் . (R.A)
xlntgson Friday, 13 August 2010 09:14 PM
நியமிக்கத்தான் வேண்டும். முகமது நபிக்கு படம் வரைகின்றவர்கள், இயேசுநாதர் திருமணம் செய்தார் என்று கூறுகின்றவர்கள் எடுக்கும் படங்கள்தான் அமெ. ஐரோப்பி யநாடுகளில் அதிகம். (நான் எப்போதெல்லாம் ஐரோப்பியா என்று சொன்னாலும் அதில் ஆஸ்திரேலியாவும் அடங்கும். அது தனி நாடு தனி கண்டம் என்றதற்கு 2 கோடி மட்டுமே ஜனத்தொகை ஐரோப்பாவிலிருந்து சென்று குடி ஏறினவர்களே அனைவரும்) இஸ்லாமிய முறைப்படி முற்றுமுழுதாக தணிக்கைசெய்ய முடியாவிட்டாலும் மதமாச்சரியம் குறித்த காட்சிகளை நீக்கவேண்டும். இறைச்சிக் கடைக்காரர் எல்லா இனத்திலும் உண்டு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
16 minute ago
31 minute ago