2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய ஈரானியர்கள் நால்வர் கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

இலங்கைக்குள் 16 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டுவர முயற்சித்த 4 ஈரான் நாட்டு பிரஜைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் எட்டு கிலோ 85 கிராம் நிறையுடைய போதைப்பொருளை கடந்த புதன்கிழமை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது மெலும் எட்டு கிலோகிராம் போதைப்பொருளுடன் மற்றொரு ஈரானியர் கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர்கள் விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஆசனத்தில் ஒடுவதற்கு தயாரான நிலையில் அமர்ந்திருந்தனர்.

சுங்க திணைக்கள அதிகாரிகளை கண்டவுடன் ஓட முயற்சித்த போது பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் சுங்க திணைக்களத்தினர் அவர்களை பிடித்துள்ளனர்.

ஏற்கனவே சுங்க திணைக்கள அதிகாரிகள் இவர்களின் பைகளை சோதனையிட முற்பட்ட போது மறுத்துள்ளனர்.

இந்த மூன்று சந்தேக நபர்களிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இது தொடர்பில் ஆராய்வதற்கு இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளதாக எஸ்.பி.ஜெயகொடி தெரிவித்தார்.

போதைப்பொருளை பரிமாற்றும் முகவர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X