Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்தது.
பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கும் நோக்கில் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக தினமும் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
இவ்வாறான செயல்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன கூறினார்.
இதேவேளை, அடுத்த வருடம் முதலாம் ஆண்டில் சேரவுள்ள மாணவர்களுக்கான நேர்காணல் பரீட்சை ஆரம்பமாகியுள்ளதுடன், இது அடுத்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை ஆசிரியர் தலைமையிலான விசேட சபை மற்றும் உப அதிபர், ஆரம்பப் பிரிவு, பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சபையின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் மேற்படி புதிதாக சேரவுள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேர்காணல் பரீட்சை நடத்தப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .