Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இந்திக்க ஸ்ரீ அரவிந்த)
புறக்கோட்டையிலுள்ள மருந்தகமொன்றில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான ஒரு தொகுதி மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சின் இலச்சினை பொறிக்கப்பட்ட மருந்துப் பொருள்கள் ஔடத அதிகாரசபையினால் கடந்த வெள்ளிக்கிழமை புறக்கோட்டையிலுள்ள மருந்தகமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் தெரிவித்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.
இது தொடர்பில் விசாரணைகளைத் தொடருமாறும் அழுத்தங்கள் இருப்பினும் கூட, குற்றவாளிகளை கைது செய்யுமாறும் பொலிஸ்மா அதிபரிடம் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தினார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் ஊழியர்களும் இந்த சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
19 minute ago
24 minute ago