2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சக்வித்தியிடம் காணி வாங்கியவர்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

குற்றப்புலனாய்வு பிரிவினாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் சக்வித்தி ரணசிங்கவிடம் இருந்து காணி கொள்வனவு மற்றும் காசோலை பெற்றவர்கள்  தானாக முன் வந்து முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர் போலியான காணி உறுதிப்பத்திரம் மற்றும் ஆவனங்களை தயாரித்து சந்தேகம் கொள்ளாத நபர்களுக்கு காணிகளை விற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சக்வித்தி  தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புபவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் உள்ள விசேட தொலைபேசி இலக்கமான 0112422176 உடன் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ முறைப்பாடு செய்ய முடியும்.

கடந்த ஓகஸ்ட் ஆறாம் திகதி சக்வித்தி மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்வதற்கு நவகமுவ சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியிருந்தார்.

இதேவேளை, சக்வித்தி நாடு திரும்பிய பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் தொடர்பான தகவல்களை வழங்காமல் இருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக வேண்டி குற்றப்புலனாய்வு பிரிவின் விஷேட பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சக்வித்தி ரணசிங்க பற்றிய தகவலை மறைத்து வைப்பதற்காக அவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சந்தேக நபரின் வீட்டிலிருந்து சக்வித்தி ரணசிங்க ஆங்கில வகுப்பு நடத்துவதற்காக பாவித்த பல இருவெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சக்வித்தி இல்லத்தில் முதலீடு செய்தவர்களிடம் இருந்து இதுவரை 2180 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல மட்டங்களில் உள்ள பல பொலிஸ் அதிகாரிகள் உயர் வட்டிக்காக சக்வித்தி ரணசிங்கவிடம் முதலீடு செய்துள்ளனர்.

மேலும், தான் வெளிநாடு செல்வதற்கு சில பொலிஸ் அதிகாரிகள் உதவி புரிந்தாக சக்வித்தி வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--