2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஏனைய கட்சிகளுடன் ஜே.வி.பி. பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முன்னணியொன்றை அமைத்து போராடப்போவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.


ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கருத்துத் தெரிவிக்கையில், இவ்விடயம் குறித்து பிற கட்சிகள், சிவில் அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவனவற்றுடன் ஏற்கெனவே ஜே.வி.பி. பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாகக் கூறினார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார, மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே ஆகியோர்  அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமையை மீறி காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரில்வின் சில்வா தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--