2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

இலங்கை அகதிகள் மீதான விசாரணை ஆரம்பம்

Super User   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.வி. சன் ஸீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்த சுமார் 500 இலங்கைத் தமிழர்கள் உண்மையான அகதிகளா என்பது குறித்த விசாரணைகளை கனேடிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி அகதிகள்  தற்போது  வான்கூவரிலுள்ள தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமது அடையாளத்தை  - தாம் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே - அகதிகள் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினை என தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாளப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிரமமான நீண்ட பயணத்தின் பின்னர் கனடா வந்தடைந்த அகதிகளை  தடுப்பு நிலையங்களில் தடுத்து வைத்திருப்பது அவர்களுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மேற்படி குடியேற்றவாசிகள் நாட்டிற்கு அச்சுறுத்தலான குழுவா இல்லையா என்பதைவிட அவர்கள் மனிதர்களாக நோக்கப்பட வேண்டும் என  தமிழ் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் கெரி ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X