Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
பாடசாலை மாணவர்கள் சில வகை போதை மருந்துகளுக்கும் உற்சாகமளிக்கும் பொருள்களுக்கும் அடிமையாகிவிட்டனர் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மோகன்லால் கிறேறோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவை தலையில் பூசும் ஜெல் வடிவிலும் ஆயுர்வேத மருந்து குளிகைகளாகவும் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த வகை ஜெல்லை தலையில் பூசியதும் உற்சாக உணர்வு ஏற்படுவதாகவும் கிறேறோ கூறினார்.
அண்மையில் தான் கல்கிசை, தெஹிவளை கரையோரப் பிரதேசங்களிலுள்ள 6 பாடசாலைகளில் ஆய்வை மேற்கொண்டதாகவும் அதன்போது தரம் 5 அல்லது 6இல் உள்ள சிறுவர்களும் போதைப்பொருளான பாபுல் சாப்பிடுவதாக அறிந்ததாகக் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஒப்பந்தம் பற்றிய விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் இவர் இதைக் கூறினார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago