2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட இலங்கை ஆர்வம்

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா.வுடன் சில முரண்பாடுகள் இருப்பினும்கூட அதன் அங்கத்துவ நாடென்ற வகையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நாவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக மனித நேய தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசுகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இதைத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கைக்கு ஐ.நா. வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இப்போது நாம் சாதித்தவிடயங்களை அனைத்து மனிதாபிமானப் பணியாளர்களினதும் ஐ.நா.வினதும் உதவியின்றி சாதித்திருக்க முடியும் என நான் எண்ணவில்லை. இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு விசேடமாக இலங்கைப் பணிப்பாளருக்கும் ஐ.நா. குடும்பத்திலுள்ள ஏனைய அமைப்புகளின் இலங்கைக்கான தலைவர்களுக்கும் ஐ.நா.வின் ஊடாக உதவி வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அரை நிரந்தர வீடுகளை ஏன் அமைத்தது என்பது தொடர்பாக ஐ.நாவுடன் வாக்குவாதங்கள் இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் பஸில், அகதிகளை இலங்கை அரசாங்கம் அங்கு பல வருடங்களாக வைத்திருக்கப் போவதாக  வதந்தி பரவியது. ஆனால், அரசாங்கம் என்ன செய்ய முயற்சித்தது என்பதை இப்போது அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர் எனக் கூறினார். Pix: Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .