2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

லெபனான் பணிப்பெண்கள் தாயகம் திரும்பினர்

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லெபனானில் உரிய அனுமதியின்றி தங்கியிருந்த இலங்கைப் பணிப்பெண்களில் நூற்றுக்கணக்கானோர் லெபனான் அரசின் பொதுமன்னிப்பையடுத்து தாயகம் திரும்பியுள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் தண்டனையின்றி தாயகம் திரும்புவதற்கு லெபனான் அரசாங்கம் 3 மாதகால அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மன்னிப்பு அவகாசத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் நேற்று லெபனானிலிருந்து புறப்பட்டதாக லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் எம்.மஹ்ரூப் தெரிவித்தார்.

தூதுவர் மஹ்ரூப்பின் கோரிக்கையைடுத்து லெபனான் அரசாங்கம் மேற்படி பொது மன்னிப்பு அவகாசத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--