2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இந்தியாவின் விசேட தூதுவராக ப.சிதம்பரம் அல்லது டி.ஆர்.பாலு?

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய அரசாங்கத்தால்  இலங்கைக்கான விசேட தூதுவராக நியமிக்கப்படவிருப்பவர் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அல்லது முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக இந்திய அரசாங்கம் விசேட தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளது என இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்திருந்தார்.

இந்த விசேட தூதுவருக்கு மீள்கட்டுமானம், சமூக அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கான  விசேட அதிகாரமும் இந்திய அரசினால் வழங்கப்படலாம் என ' லங்கா தீப' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசேட தூதுவர் அதிகாரிகள் மட்டத்தைச் சேர்ந்தவராக இல்லாமல், சக்தி வாய்ந்த அரசியல் மட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் தெரிய வருவதாக அப்பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியும் இந்திய வெளிவிவகார அமைச்சும் முன்வைத்த ஆலோசனைக்கமையவே இலங்கைக்கான விசேட தூதுவரை நியமிப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்படி விசேட தூதுவர் பதவிக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோரின் பெயர்கள் இந்தியப் பிரதமருக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0

  • xlntgson Sunday, 22 August 2010 09:41 PM

    டி ஆர் பாலு யுத்தத்தின் பின் வந்து விட்டுப்போயவிட்டார். பழ.சிதம்பரம் வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம், இதில் இலங்கை அரசின் விருப்பம் கேட்கப்படுமோ தெரியாது. மன்மோஹன்சிங் இப்போது உலக தலைவர்களில் எல்லாம் சிறந்த தலைவராக கணிப்பொன்றின் படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது அமைச்சரவையில் இரண்டாம் அந்தஸ்தை வகிப்பவர் சிதம்பரம் என்றால் மிகையாகாது தமிழ்நாட்டுக்கு பிரதமர்பதவி வழங்கப்பட்டால் பழனியப்பன் சிதம்பரமே பிரேரிக்கப்படுவார் வேறு மூத்த தலைவர் ஒருவரும் போட்டிக்கு இல்லை அங்கு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X