2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வட பகுதி சிறார்கள் மத்திய மாகாணத்துக்கு விஜயம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

யுத்தத்தின் போது தாய்தந்தையர்களை இழந்த அனாதைகளாகிய வடபகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு மத்திய மாகாணத்திற்கு இப்பொழுது விஜயம் செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான நாளைய இளைஞர்கள் அமைப்பு இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது.

வவுனியா ஜோன்பொஸ்கோ சிறுவர் நிலையம், மற்றும் அகிலாண்டேஸ்வரி சிறுவர் நிலையம் என்பவற்றைச் சேர்ந்த இச்சிறுவர்கள் வெள்ளிக் கிழமை இரவு, கண்டியில் தற்போது நடைபெறுகின்ற ஸ்ரீ தலதா மாளிகையின் ரந்தோலி பெரஹராவைப் பார்வையிட்டதுடன் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டனர்.

சனிக்கிழமை காலை கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்து சமய ஆராதனைகளில் ஈடுபட்டனர். அதன்பின் பேராதனைப் பூங்காவிற்கும் விஜயம் செய்தனர். மத்திய மாகாண ஆளுந்ர் டிக்கிரி கொப்பேகடுவவின் விருந்தினர்களாகவே இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--