2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வத்திகானிலிருந்து கர்தினால் வருகிறார்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வத்திகானிலிருந்து கர்தினால் ஒருவர் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கர்தினாலாக திருநிலைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும்போது இந்நாட்டிலுள்ள ஆயர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

ஏற்கெனவே இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மாத்திரமே கர்தினாலாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1965 ஆம் ஆண்டு தோமஸ் பெஞ்சமின் குரே இலங்கையின் முதலாவது கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--