Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ். பல்கலைகழத்துக்கு முன்னாலுள்ள பரமேஸ்வராச் சந்தியிலிருந்து நாச்சிமார் கோயிலடி வரையிலான இராமநாதன் வீதியை இனி ‘சேர்.பொன். இராமநாதன் வீதி’ என்று பெயர் மாற்றம் செய்து தருமாறு யாழ். மாநகரசபை மேயரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகர் தினம் நெருங்கி வரும் சூழலில் இன்று யாழ். பல்கலைக்கழகமாக மிளிரும் முன்னைய பரமேஸ்வராக் கல்லூரியினை நிறுவியவரான சேர்.பொன். இராமநாதன் பற்றி எல்லோர் மனங்களிலும் உயர்வான எண்ணம் ஏற்படுத்தும் வகையில் இதுவரை காலமும் இராமநாதன் வீதி என அழைக்கப்பட்டு வந்த வீதியின் பெயரை ‘சேர்.பொன்.இராமநாதன் வீதி’என மாற்றம் செய்யும்படி பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் தலைவரும் சட்டத்தரணியுமான கனக நமநாதன் மேயரிடம் கோரியுள்ளார்.
இது தவிர தபால்பெட்டிச்சந்தி என இதுவரை காலமும் அழைக்கப்பட்டு அண்மையில் ‘பரமேஸ்வராக்கல்லூரி வீதி’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வீதியின் பெயரையும் ‘பரமேஸ்வராக் கல்லூரி பின்பக்க வீதி’என மாற்றம் செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago