Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
எதிர்வரும் பத்தாண்டு அரசியலைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதே கட்சிக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் நன்மை தருவதாக அமையும் என மு.கா.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்பட வேண்டும் என, மு.கா.வின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
இது தொடர்பாகவும், அரசாங்கத்தோடு முஸ்லின் காங்கிரஸ் இணைய வேண்டுமா, இல்லையா எனவும் அவரிடம் நாம் வினவியபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டால், முஸ்லிம் காங்கிரஸ் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதோடு, தனது ஆதரவாளர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
எதிர்க்கட்சியில் இருப்பதால் எதுவித பயனுமில்லை. நாட்டில் தற்போது இருப்பது பலவீனமானதொரு எதிர்க்கட்சியாகும். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவரும் பலவீனமானவர். அவரை கட்சித் தலைமைத்துவத்திலிருந்து கழற்றிவிட வேண்டும் என்று அவரின் கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துள்ளன. எனவே, தொடர்ந்தும் பலவீனமானவரே எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்.
இப்படியானதொரு எதிர்க்கட்சியில் மு.கா.வும் இணைந்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
அரசாங்கத்தோடு இணையும்போது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் இல்லை. ஆளுந்தரப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இருப்பது தற்போதைய நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கும், கட்சிக்கும் பலமான விடயமாகும் என்றார்.
eksaar Tuesday, 24 August 2010 04:05 AM
இது உங்களின் சொந்த கருத்தா மப்ரூக்? இருந்தாலும் உங்களை தமிழ் மிரரில் காண்பதில் மகிழ்ச்சி.
Reply : 0 0
அம்பாறையான் Tuesday, 24 August 2010 05:39 PM
இப்பதான் ஞானம் வந்ததாக்கும் தம்பிக்கு..
ஏனோ எலக்சன் மட்டும் யானையில கேட்டார்...
Reply : 0 0
riza Tuesday, 24 August 2010 08:36 PM
மிஸ்டர் ஹரிஸ், உங்களது கருத்துக்கு எமது முஸ்லிம் சமுதாயம் சார்பாக நன்றி. முதலில் இந்த விடயம் வெற்றி கரமாக முடிய அலலாஹ் துணை புரிவனாக...
Reply : 0 0
Pottuvilan Wednesday, 25 August 2010 05:38 AM
மிஸ்டர் ஹரீஸ், பொதுதேர்தலுக்கு முன் இதைத்தான் நாங்கள் இரவு பகலாக கத்திகத்தி சொன்னோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
2 hours ago