2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இந்தியாவுக்கான தூதுக்குழு அங்கத்தவர் எண்ணிக்கை குறைப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜமீலா நஜ்முதீன்)

இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் நாளை இந்தியாவுக்குப் புறப்படுவர் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பஸில் ராஜபக்ஸ மாத்திரமே இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தானும் பாதுகாப்புச் செயலரும் இக்குழுவில் இடம்பெறாமைக்கான காரணத்தை அவர் கூறவில்லை.

மூன்று பேர் கொண்ட குழு கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவிருந்தது. எனினும் இவ்விஜயத்தை தாமதிக்குமாறு இந்திய அரசாங்கம் கோரியதையடுத்து ஓகஸ்ட் 24 ஆம் திகதிக்கு இவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (DM)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--