2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அரசியலமைப்பு சீர்திருத்த வரைபை கையளிக்கக் கோருகிறது ஐ.தேக.

Super User   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான திட்ட வரைபை கையளிக்காவிட்டால் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை தொடரப் போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

 

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதைத் தெரிவித்தார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துடன் ஐ.தே.க. கடந்த பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது திஸ்ஸ அத்தநாயக்கா தொடர்ந்து பேசுகையில், "ஒவ்வொரு சந்திப்பின் போதும் அரசாங்கம் புதுப்புது விடயங்களை முன்வைக்கின்றது" என்றார்.

"முதலில் தேர்தல் முறை சீர்த்திருத்தம் பற்றி பேசியது. பின்னர் நிர்வாக அதிகாரம் கொண்ட பிரதமர் என்ற விடயத்துக்குத் தாவியது. இறுதியாக நடந்த கூட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் மீதுள்ள கட்டுப்பாட்டை அகற்றுதல் என்ற விடயத்தை முன்வைத்தது.

இதனால் அரசியலமைப்பு தொடர்பான நகலை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என கோருகின்றோம். அதன்மீது விவாதம் செய்வதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--