Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
போலியான இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை சிலாபம் நகரில் கைது செய்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாகனத்தின் சாரதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிலாபம் நகரில் தொடர்ச்சியாக இந்த வாகனம் போலி இலக்கத்தகட்டுடன் சுற்றுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று முந்தினம் இரவு இந்த வாகனம் சிலாபம் நகரில் வைத்து கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ மல்தெனிய தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
37 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
38 minute ago
42 minute ago