Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிருஷான் ஜீவக ஜயருக்)
24 வயதான யுவதியொருவரை கடத்திச் சென்று வல்லுறக்குட்படுத்திவிட்டு பின்னர் அந்த யுவதியின் சம்மதமின்றியே அவரை திருமணம் செய்த ஒருவரை மாத்தறை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் இந்த யுவதியை மேற்படி சந்தேக நபர் சந்தித்துஇ தான் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஆதரவாளர் எனும் அவர் மூலம தொழிலொன்றைப் பெற்றுக்கொடுப்பதாகவும் ; யுவதிக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன்பின் மேற்படி எம்.பியிடம் கடிதமொன்றைப் பெறுவதற்காக அக்குரஸ்ஸவுக்கு வருமாறு யுவதியை அழைத்துஇ பின்னர் அவரை அம்பலாங்கொடைக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் யுவதியை அச்சுறுத்தி அவரை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய யுவதி இது தொடர்பாக பொலிஸாரிடம் புகாரிட்டுள்ளார்.
இச்சந்தேக நபர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பியுடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி யுவதி மருத்துவ சோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார். சந்தேக நபர் நாளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
38 minute ago
2 hours ago
xlntgson Saturday, 11 September 2010 09:48 PM
தன்னால் கெடுக்கப்பட்ட பெண்ணுக்கு 'வாழ்வு' கொடுத்து இருப்பார்! நடந்ததுநடந்தது இனி என்ன செய்ய என்று ரஜினிகாந்த ஒரு படத்தில் இவ்வாறு செய்கிறார். அதை பெண் இயக்கங்கள் அந்த காலத்திலேயே எதிர்த்தன. சில நேரடி நிகழ்ச்சிகளில் கற்பழிப்புக்குள்ளான பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் தொலைகாட்சி நிறுவனத்தினர். ஆனால் சரிப்போகவில்லை. ஏனெனில் படகதாநாயகர்கள் போல் நம் நிஜ வாழ்க்கை கதாநாயகர்கள் திருமணம் புரியும் தகுதி இல்லாது ரஸ்தியாதிக்காரர்களாக இருக்கின்றனர். வேலைவெட்டி இல்லாத, கெட்ட பழக்கங்கள் நிறைந்து. போதை...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago