2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பாண் விலை அதிகரிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

450 கிராம் பாணின்  விலை இன்று நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 'பேக்கரி உரிமையாளர்களுக்கு 50 கிலோகிராம் கோதுமை மாவிற்கு வழங்கப்பட்ட 225 ரூபா விலைக்கழிவு வழங்கப்பட்டது. எனினும் ஒரு கிலோ மாவின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதன் மூலம் இவ்விலைகழிவு 150 ரூபாவால் குறைந்துவிட்டது. பாணின் புதிய விலை 41 முதல் 45 ரூபாவாக இருக்கும்' என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. நாணயக்கார நேற்று டெய்லி மிரருக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .