Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல இந்திய பாடகி சொர்ணலதா இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார்.
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகி சொர்ணலதா (37), சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
கேரளா- பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பின்னணி பாடகியாக வலம்வந்திருந்தார்.
கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி...’ எனும் பாடலை பாடியதற்காக சொர்ணலதாவுக்கு தேசி விருது கிடைத்தது.
தளபதி படத்தில் ’ராக்கம்மா கையைத்தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச...’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்றன இவர் பாடிய பிரபலமான தமிழ் பாடல்களாகும்.
பாடல் பாடுவதோடு மட்டுமல்லாமல் ஹார்மேனியம் - கீபோர்ட் வாசிப்பதிலும் சொர்ணலதா சிறந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
15 Nov 2025
15 Nov 2025
xlntgson Sunday, 12 September 2010 10:12 PM
நல்ல குரலை கொண்டிருந்தவர்,
நுரை ஈரல் நோய் என்றால் டெங்கு நோயா? எங்கு பார்த்தாலும் சளி ஏற்கனவே உலக முழுதும் உஷ்ணமும் கூட பல இடங்களில் குடி நீருக்கும் தட்டுப்பாடு, போதாக்குறைக்கு எல்லா இடங்களிலும் ஊத்தை குப்பை அப்புறப்படுத்த முடியாமல் (குப்பை கொட்ட இடம் இல்லையாம்!) போட்டு எரிக்கின்றனர். அது, கிட்ட நின்று எரிப்பார் இல்லாமல், பரவி பரவி சில இடங்களில் வீடுகள் கடைகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது. கால்நடைகளுக்கும் புல் இல்லை. சளி நோய்களோடு முப்பத்தைந்து வயதேனும் வாழ இயலுமா, எதிர்கால சந்ததிகளுக்கு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 Nov 2025
15 Nov 2025