2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                                   (பாரூக் தாஜுதீன்)

கடந்த 2000.04.30ஆம் திகதி பேலியகொட பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட ஒலிவர் பெட்ரிக் ஸ்டிபனின் வழக்கு தொடர்பில் பெலியகொடையை சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சுக்கா என்று அழைக்கப்படும் ததல்லகே அஜித் பத்மகுமாரா, சுட்டா என்று அழைக்கப்படும் ததல்லகே லலித் மற்றும் குக்கா என்று அழைக்கப்படும் ததல்லகே ஆனந்த ஆகியோருக்கே நீதிபதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்டவர் நீதிமன்ற உத்தரவின் படி, பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே கொல்லப்பட்டதாக வழக்காளி சார்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புதுவருட நிகழ்வுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட வரை பின் தொடர்ந்து  சென்று கழுத்தின் பின்புறமாக சமையலறை கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .