2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் அக்கல்வியின் அடிப்படை தகுதி பெறவில்லை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

வெளிநாடுகளில் மருத்துவ துறையில் பட்டம் பெற்றவர்களில் பலர், மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகமையினைப் பெற்றிருக்கவில்லை. இவர்களை வைத்திய தொழிலுக்கு நியமிப்பது பாதுகாப்பானது அல்ல என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

இதன் காரணமாகவே, இலங்கை மருத்துவ சங்கம், மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு என்பன கடுமையான நியமங்களையும் நெறிப்படுத்தல்களையும் விதித்துள்ளது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டது.

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் 227பேரில் 6 பேர் க.பொ.த. சாதாரண தரம் மட்டும் சித்தியடைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் பாதெனியா கூறினார். அத்துடன் வெளிநாட்டு எம்.பீ.பீ.எஸ். பட்டதாரிகளில் சிலர் உயர் தரத்தில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் மட்டும் சித்தியடைந்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.

தனியார் மருத்துவ கல்லூரிகள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தொடர்பாக எமக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஏதுமில்லை. வைத்தியர்களின் வாண்மைத் தரத்தைப் பேணுவது பொறுப்பு வாய்ந்தோரின் கடமையாகும். வெளிநாடுகளில் போலியான மருத்துவ பட்டத்தை பெறுவதற்கான உள்ளவர்கள் என்பதற்காக யாரையும் மருத்துவ தொழிலில் ஈடுபட அனுமதிக்க முடியாது.

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள், மருத்துவத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன் "விதி 16" பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என விதிக்கப்பட்டது வைத்திய வாண்மையின் தரத்தைப் பேணுவதற்கே என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .