2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

நாடாளுமன்ற சபை ஜனவரி மாதம் செயற்பட ஆரம்பிக்கும்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான நாடாளுமன்ற சபை ஜனவரி மாதம் செயற்பட ஆரம்பிக்கும் என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகையில், ஜனவரி மாதம் ஏழு சுயாதீன ஆணைக்குழுக்களும் நாடாளுமன்ற சபையினால் நியமிக்கப்பட்டிருக்கும். பல வருடகால இடைவெளியின்பின் உத்தியோகஸ்தர்கள் தமது முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் வெளிப்படுத்த முடியும் என்றார்.

நாடாளுமன்றச் சபையை சட்டபூர்வமாக ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். ஐந்து பேர் கொண்ட இச்சபைக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் தமது பிரதிநிதிகளை நியமித்தவுடன் 2011 ஆம் ஆண்டிலிருந்து இச்சபை செயற்படத் தொடங்கும் என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--