2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

ரவூப் ஹக்கீமுக்கு கல்முனையில் பலத்த பாதுகாப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(றிப்தி அலி)

18ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் கல்முனைக்கு முதற் தடவையாக விஜயம் செய்துள்ள நாடாளுமன் உறுப்பினரும் அக்கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்திற்கு செல்லும் ரவூப் ஹக்கீமுடன் குறிப்பிட்ட சில பாதுகாப்பு அதிகாரிகளே செல்வது வழமை.

எனினும், இன்று கல்முனை ஸாஹிரா கல்லூரியில் இடம்பெற்ற மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த நினைவுப் பேருரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  சிறப்புரையற்றவுள்ளதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றவுள்ள, கல்முனை ஸாஹிரா கல்லூரிக்குள் நுழையும் அனைவரையும் பலத்த சோதனைக்குட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் வழமைக்கு மாறாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டமொன்றிற்கு விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .