2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

தீர்மானத்தை மீளாய்வு செய்கிறார் ஜோன் அமரதுங்க

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  alt                                               (ஜமீலா நஜிமுதீன்)

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் பங்குபற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவில் கலந்து கொள்வது தொடர்பிலான தனது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன் அமரத்துங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன்  ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பிதலை முன்னர் ஜோன் அமரதுங்க ஏற்றுக் கொண்டிருந்தார்.

எனக்கு விடுக்கப்பட அழைப்புக்கு கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பினை அடுத்து கட்சித்தலைவர் இது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் அரசாங்க தூதுக்குழுவுடன் நான் பங்குபற்றுவதில் எந்த தவறும் காணாததால், எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். 

எனினும் தற்போது எனது முடிவை மறுபரீசீலனை செய்துவருகின்றேன். நான் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடரில் பங்குபற்றாமல் விடலாம் என ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

அடுத்த வாரம் தனது குடும்ப விடயம் தொடர்பாக அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார். அக்குழு உறுப்பினர் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்கா  செல்லவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--