Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமீலா நஜ்முதீன்)
மட்டக்களப்பு கரடியனாற்றில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசேட படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
அரசியல் காரணமாகவோ அல்லது நாசகார வேலை காரணமாகவோ இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதை தாம் முற்றாக நிராகரிகரிக்கிறோம். படையினர் விசாரணைகளில் ஈடுப்பட்டிருப்பதாகவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.
அரசாங்க பகுப்பாய்வாளர்களை உள்ளடக்கிய விசேட குழுவினர், கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர் விரைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ன செல்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதால் பதில் பாதுகாப்பு அமைச்சராக டி.எம்.ஜயரட்ன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீன நிறுவனமொன்றிற்குச் சொந்தமான வெடிபொருள்கள் நிரப்பிய 3 கொள்கலன்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.
முதலில் ஒரு கொள்கலனிலிருந்து வெடிபொருள்களை இறக்கியபோது ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏனைய கொள்கலன்களும் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago