2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடி செய்த பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                         (ரி.பாரூக் தாஜுதீன்)

கைத்தொலைபேசிகளை பயன்படுத்தி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல மில்லியன் ரூபாவை பலரை ஏமாற்றி பெற்றுக் கொண்ட இரண்டு பெண்களை கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.

இவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் வெளிநாட்டு போலி  வேலைவாய்ப்பு முகவர்கள் நிலையமொன்றை நடத்தி வந்தனர். இவர்களிடமிருந்து 74 கடவுச் சீட்டுக்களை பொலிஸார் கைப்பற்றினர். இவர்கள் வேறு பலரது உதவியுடன் புத்தளம், கதிர்காமம், மாத்தறை, மெதிரிகிரிய, ஹெட்டிப்பொல, கம்பஹா, பசறை ஆகிய இடங்களிலிலும் போலி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்களை நடத்தி வந்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சம்பளம் எடுக்க தொடங்கிய பின் மாதாந்தம் 25,000 ரூபா வீதம் 3 இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தலாம் என ஆரம்பத்தில் கூறி தொடர்புகளை ஏற்படுத்திய பின், மருத்துவ பரிசோதனை, முற்பணம் என பல வகையிலும் இவர்கள் பணத்தை அறவிட்டதாக டாம் வீதி பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினர்.

விசாரணைகள் முடியாததால் இவர்களை விளக்க மறியலில் வைக்கும் படி பொலிஸார் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர்.

மேலதிக பொலிஸ் மா அதிபர் எச்.எம்.பி.ஹேரத்தின் நெறிப்படுத்தலில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்கர்த்தி பெரேரா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த மனம் பேரி ஆகியோர் இந்த ஊழலுடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்யும் பொருட்டு விசாரணைகளை தலைமை தாங்கி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .