2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

நாடாளுமன்றத்திற்கு பதிலாக அதிகாரசபை ஏற்படுத்தப்பட்டால் ஆச்சரியமில்லை : ஐ.தே.க.

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால், நாட்டை ஆட்சி செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குப் பதிலாக மற்றொரு அதிகார சபையை அமைத்தாலும் ஆச்சரியமில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஐ.தே.க. பேச்சாளர் கயந்த கருணாதிலக்க  இது தொடர்பாக கூறுகையில், கொழும்பு மாநகர சபை ஒதுக்கிவிட்டு அதற்குப் பதிலாக பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படும் அதிகாரசபையொன்றை ஏற்படுத்த திட்டமிட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பதிலாக அதிகார சபையொன்றை ஏற்படுத்த முயற்சித்தாலும் ஆச்சரியமில்லை எனக் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--