Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக படகு மூலம் ஆட்களை கடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெற்ற ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்தரை வருடகால சிறைத்தண்டனை வித்துள்ளது.
36 வயதான பத்மேந்திரா புலேந்திரன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடையொன்றுக்கு உரிமையாளராக உள்ளார்.
2009 ஆம் ஆண்டு 194 இலங்கையர்களை அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் கொண்டு வந்தமை தொடர்பாகவே இவருக்கு சிட்னியிலுள்ள நீதிமன்றமொன்று இத்தண்டனையை அளித்துள்ளது.
அகதிகளில் 20 பேருக்கான அவுஸ்திரேலிய முகவராக செயற்பட்டதன் மூலம் இவருக்கு 42655 அவுஸ்திரேலிய டொலர் லாபம் கிடைத்திருக்கும் எனவும் பின்னர் இப்படகில் அளவுக்கதிமான நபர்கள் இருந்தமையால் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டு அவுஸ்திரேலியா பொலிஸாருக்கு இப்படகு பற்றி அறிவித்தாக நீதிபதி கூறியுள்ளார்.
புலேந்திரன்இ 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவிட்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும் சுத்திகரிப்பாளராக வேலை செய்த பின்னர் கடையொன்றை அவர் வாங்கியதாகவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
ஐந்தரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர் 3 வருடங்கள்வரை வெளியில் வர முடியாது. 2012 ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்படுவதற்கான தகுதியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 minute ago
11 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
13 minute ago
17 minute ago