Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ. ஜயசேகர)
பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற சபைக்கான தனது பிரதிநிதிகளை நியமிக்கத் தவறியதால் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற அங்கத்தவர்களிலிருந்து இருவரின் பெயர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்புவார் என நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நீல் இதவல டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
"இதற்காக 7 நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களை கழித்துப் பார்த்தாலும் இந்த அவகாசம் நாளை வியாழக்கிழமை முடிவடைகிறது. எனவே சபாநாயகர் தானே தமிழ், முஸ்லிம் எம்.பிகளிலிருந்து இருவரை சிபாரிசு செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என நீல் இதவெல தெரிவித்தார்.
"எவ்வாறெனினும் நாளையாவது பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் தமது பிரதிநிதிகளின் பெயர்களை அனுப்புவர் என நாம் எதிர்பார்க்கிறோம்" எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
3 hours ago