2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஸ்ரீ ரங்காவின் தீர்மானங்களுக்கு ஐ.தே.க. பொறுப்பல்ல - திஸ்ஸ அத்தநாயக்க

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவுக்கும் இடையில் இனி எந்தவொரு தொடர்பும் இல்லை. அவருடனான ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளமையினால் ரங்காவின் தீர்மானங்களுக்கு கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது.

அத்துடன் அவருடைய தனிப்பட்ட தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி பொறுப்பு கூறாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.தே.க.வின் வேட்பாளராக போட்டியிட்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீ ரங்கா, அவருக்கு வாக்களித்த கட்சியின் ஆதரவாளர்களை ஏமாற்றியுள்ளார். அதனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--