Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இன்று வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்றம் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பாக விஜித ஹேரத் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பினார்.
இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கூறினார்.
இதேவேளை, சரத் பொன்சேகா நேற்று வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாது தடுக்கப்பட்ட நிலையில், இதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆட்சேபனையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago