Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நாவின் 65ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய மாலைதீவின் உபஜனாதிபதி கலாநிதி முஹம்மத் வாஹீட் ஹஸன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பத்தை சுமூகமாக தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியிருந்ததார்.
மாலைதீவில் ஏற்பட்டிருந்த அரசியல் பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்து வைத்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவியளித்த சர்வதேச சமூகத்திற்கும் குறிப்பாக இலங்கை ஜனாதிபதிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 25 வருடகால யுத்தத்தின் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தமது ஆதரவை வழங்குமாறும் சர்வதேச சமூகத்திற்கு மாலைதீவின் உபஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வருடம் ஜுலை மாதம் மாலைதீவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவு ஜனாதிபதி முஹம்மத் நஷீட் மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (டியான் சில்வா) (DM)
16 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
1 hours ago