2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கப்பல் கப்டனின் சடலம் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்ட இலங்கை கப்பல் கப்டன்  ஒருவரின் சடலம் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஷார்ஜஹ் துறைமுகத்திற்கு அருகில் மேற்படி சடலத்தை தாங்கிய கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்பரப்பை மீறி சோமாலிய கடற்பரப்பில் குறித்த கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இலங்கை கப்பல் கப்டன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.  

சுனில்  தர்மரட்ன (வயது 54) என்ற இலங்கை கப்பல் கப்டனே இவ்வாறு கொல்லப்பட்டவர் ஆவார்.  


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--