2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

புலிகளுக்கு வடகொரியா ஆயுதம் விநியோகித்தது : ரொஹான் குணரட்ன

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வடகொரியா 1997 ஆம் ஆண்டிலிருந்து ஆயுதங்களை விநியோகித்ததாக சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன கூறியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று  சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கணக்காளரான பொன்னையா ஆனந்தராஜா என்பவர் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன  கூறினார்.

இலங்கையில்  தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் சர்வதேச வலையமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .