2021 மார்ச் 08, திங்கட்கிழமை

முதலமைச்சரை பிள்ளையான் என அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(திருகோணமலையிலிருந்து றிப்தி அலி)

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் பல எதிர்க்கட்சி உறுபினர்கள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பிள்ளையான் என்று பல தடவைகள் அழைத்தனர்.

சபைக் கூட்டங்களின் போது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அந்த அடிப்படையில் அவரை பிள்ளையான் என்று கூறுவதை தவிர்த்து, சிவனேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கும் படி சபை தவிசாளர் பாயிஸ், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, பிள்ளையான் என அழைத்த மாகாண சபை உறுப்பினர்கள் அதை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .