A.P.Mathan / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் இருக்கின்ற தமிழர்கள் தங்களுடைய முழு பலத்தினையும் பொன்சேகாவின் விடுதலைக்காக காட்டுவார்கள் என 'கனடா தமிழ் காங்கிரஸ்' தேசிய பேச்சாளர் டேவில் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்... 'எங்களுக்கும் பொன்சேகாவுக்கும் இராணுவ தளபதி என்ற முறையிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எங்களுக்கு அவர் ஒரேமாதிரியானவர்தான். ஆகையினால் பொன்சேகாவின் விடுதலைக்காக கனடா வாழ் தமிழர்கள் நிச்சயமாக போராடுவார்கள். தனிப்பட்டவர்களின் விருப்பிற்காக முறையற்ற விதத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகாவின் விடுதலைக்காக எம்மக்கள் பின்புலத்தில் செயற்படுவார்கள்...' என்று குறிப்பிட்டுள்ளார்.
'மிகவும் கொடூரமான முறையில் பொன்சேகா நடத்தப்படுகின்றார். எங்களுடைய தமிழ் மக்களும் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுகிறார்கள். எங்களுடைய மக்களுக்காக மட்டுமல்லாமல் பொன்சேகாவுக்காகவும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக போராடுவார்கள் எனவும் 'கனடா தமிழ் காங்கிரஸ்' தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
TAMILAN Sunday, 10 October 2010 05:22 PM
நீயும் ஒரு தமிழனா, இனத் துரோகி.
இப்படி தமிழர்களை எவ்வளவு காலத்துக்கு ஏமாற்ற?
பதிலை எதிர்பார்கிறேன். ................................................................
இப்படிக்கு .................?
A
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025