2021 மார்ச் 06, சனிக்கிழமை

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

இலங்கை வெளிநாட்டு தூதரங்களில் காணப்படும் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை வெற்றிடங்களை போட்டிப் பரீட்சை மூலம் நிரப்புவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச முகாமைத்துவ சேவை, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை அல்லது மாகாணசபை அல்லது உள்ளூராட்சிசபை, அரச முகாமைத்துவ சேவையின் தரம் -ஈ அல்லது தரம் - ஈஈ ஐச் சேர்ந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கீட்டு முறைகள், தாபான விதிமுறைகளும் அலுவலக நடைமுறைகளும், ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவு ஆகிய 4 பாடங்களை உள்ளடக்கியதாக இதற்கான போட்டிப் பரீட்சை, பரீட்சை ஆணையாளரினால் கொழும்பில் நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்ப முடிவு திகதி 2010.11.08 என அமைச்சின் செயலாளர் சீ.ஆ.ஜெயசிங்க குறிப்பிட்ட அறிவித்தலில் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .