2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு நகர மக்கள் வெளியேற்றம்; அரசியல் ரீதியில் நோக்க வேண்டாம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு நகரம் மற்றும் நகரில் வாழும் மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நகரின் பல பகுதிகளிலும் தங்கியுள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் குடியேற்றப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினை அரசியல் ரீதியில் நோக்காது மனிதாபிமான ரீதியில் நோக்க வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரங்கள் மக்களை தொடர்ந்தும் சேற்றுக் குழிகளிலேயே தங்கவைக்க விரும்புவதாகவும் அக்கட்சியினரின் வாக்குகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் மத்தியிலேயே அமையப்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளச் சந்திப்பு இன்று மாலை ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றியதாவது:-

கொழும்பு நகர அபிவிருத்தி


அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம் கொழும்பு நகரப் பிரதேசத்திலிருந்து அகற்றப்படும் பொதுமக்கள் உரிய முறையில் வேறு பிரதேசங்களில் சகல வசதிகளுடனும் குடியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்களின் அனைத்துத் தேவைகளையும் அரசாங்கமே நிவர்த்தி செய்யும்.

இந்நிலையில், இது விடயமாக ஐக்கிய தேசிய கட்சி தேவையற்ற விதமாகச் சிந்தித்து பொதுமக்களை குழப்பி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களே மேலும் மேலும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.  

பொன்சேகா விவகாரம்

இதேவேளை, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, சட்டத்தின் பிரகாரமே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தின் பிரகாரமே அவர் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.

2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்


2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, சமாதானமானதொரு சூழ்நிலையினையும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய எதிர்கால திட்டங்களையும் உள்ளடக்கியதாகவே காணப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.(M.M)

 


  Comments - 0

 • G.Pramanathan Thursday, 14 October 2010 10:34 PM

  நம்பிட்டமில்ல..

  Reply : 0       0

  Menu Thursday, 14 October 2010 10:39 PM

  மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதென்பது உண்மையென்றால் அரசாங்கத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

  உண்மையில் இது விடயத்தில் அரசியல் ரீதியிலான கணிப்பீடு தவறானது என்பதே எனது கணிப்பாகும்.

  Reply : 0       0

  xlntgson Friday, 15 October 2010 09:57 PM

  அரசியல் இருக்கிறதோ இல்லையோ, சீன நிறுவனத்துக்கு வழங்கப்படுமோ இல்லையோ, கொழும்பில் வாழ்கின்றவர்கள் முக்கியமாக முஸ்லிம்களை எடுத்துக்கொண்டால் பாடசாலை & மையவாடி பிரச்சினையை அவர்கள் எதிர்நோக்குவார்கள். கொழும்புக்கு வெளியே 10 கி.மீ. போனவர்கள் கூட தங்களது பழைய பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கவும் இறந்தவர்களை கொழும்புக்கு கொண்டுவரவும் மிக சிரமப்படுகின்றனர். மரங்களை வேரோடு பிடுங்கி நடுவது போன்ற வேலையாக தெரிகிறது! நல்ல விலை கிடைக்கிறது என்றால் பாரம்பரியமானவை எல்லாம் விற்பனைக்கா? தொடர்மாடி வீடுகள் யாருக்காக?

  Reply : 0       0

  xlntgson Saturday, 16 October 2010 09:57 PM

  தொடர்மாடிவீடுகள் அடுக்கடுக்காக கட்டப்படுமாம். ஆனால் அதில் நீங்கள் வாழ தகுதி ஆனவர்களா என்று கேட்கப்படும். அதாவது இவ்வளவு கொடுப்பனவை முதலில் செலுத்தவேண்டும், பிறகு நடத்து செலவு இவ்வளவு என்றெல்லாம். ஏழைகளான இவர்கள் விழி பிதுங்குவார்கள் அப்போது அதிக நிலம் கிடைக்கிறதே என்று வெளி மாவட்டங்களுக்கு போக சம்மதிப்பார்கள்; அங்கே பாடசாலை அனுமதியில் அப்பகுதி பிள்ளைகளுக்கே முன்னுரிமை! வாக்காளராக பதிவு செய்ய போனால் பல தடை, உதாரணமாக புத்தளம் மா. முஸ்லிம் மா. ஆகிவிடும் என்று முஸ்லிம்களின் பூர்விகம், கேள்விக்கணைகளில்!

  Reply : 0       0

  xlntgson Sunday, 17 October 2010 09:33 PM

  இந்த செய்தியை நான் வேறு ஓர் இணையத்தில் ஆங்கிலத்தில் வெளியிட்ட போது துவேஷக்காரன் என்று ஏசப்பட்டேன். இதை வெளியிட்ட தமிழ் மிரருக்கு நன்றி. புதிதாக கட்டப்போகும் (apartment) அபார்ட்மென்ட் அல்லது வீட்டுத்தொகுதி பணக்காரர்களுக்கு மட்டும் என்றால் கொழும்பை ஏழைகள் இல்லாத நகரமாக ஆக்க வேண்டும் என்று நினைத்தால் மனிதர்களது பொருளாதார நிலைக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? லலித் கொத்தலாவல சக்வித்தி போன்றவர்கள் எவ்வளவு பணம் பெற்றவர்கள் அவர்களது நிலைமை என்ன? நான் 15 வருடங்களுக்கு மேலாக கொழும்புக்கு வெளியே வாழ்பவன், அறிக.

  Reply : 0       0

  xlntgson Thursday, 21 October 2010 08:54 PM

  அவிசாவிளையும் கொழும்புமாவட்டம் தானே, என்ற கேள்விக்கு பதில்; அது இப்போது கொழும்பு மாவட்டம் தான் ஆனால் தொகுதி அடிப்படையில் தேர்தல் வரும் போதில் அரசியல் வாதிகளுக்கு திண்டாட்டம் ஆகிவிடும். அதே நேரம் கொழும்பில் தொழில் செய்கின்றவர்கள் அவிசாவிலைக்கு போய் திரும்பவே நேரம் போய் விடும் மேலும் நான் முதற் சொன்ன பாடசாலை பள்ளிவாயல் மையவாடி முதலான ஜன சமூக நிலையங்கள் தொடர்புகள் அற்றுப்போய்விடும். யாரும் வெளியில் அனுப்பப்படமாட்டார்கள் என்று வாசுதேவநாணயக்கார கூறி இருக்கின்றார் ஆறுதல்! அமைச்சு அறிக்கையும் அவசியம்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .