Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்தீய சேனநாயக்க)
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நாளை திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
பிரித்தானியாவுக்கு செல்லவுள்ள அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானிய ராஜாங்கச் செயலாளர் வில்லியம் ஹேக், பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்கின்றமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .