2021 மார்ச் 06, சனிக்கிழமை

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

Super User   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம். ரிஃபா)

நாடாளுமன்ற உறுப்பினரும் சினிமா நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோசடி குற்றச்சாட்டொன்று தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அவர் இன்று கண்டி மேலதிக நீதவான் திருமதி தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

அப்போது, ரஞ்சன் ராமநாயக்கவை 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 5 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதித்தார்.

அத்துடன், வெளிநாடு செல்வதாயின் நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .